RV has sent a tag our way! And to be done in Tamil. Apologies to the readers (plural - I am optimistic), who don't speak or just don't read Tamil.
இந்த தொடர் பதிவை அனுப்பியதற்காக RV அவர்களுக்கும், இதை எழுத உதவியதற்காக Google Transliteration-உக்கும் நன்றி. இதை அனுப்பும் அளவுக்கு ப்ளாக் எழுதுபவர்கள், இந்த தொடர் பதிவை முன்பே செய்யாதவர்கள் யாரும் எனக்கு தெரியாது. செய்ய வேண்டும் என்று தோன்றினால் நீங்களும் தாராளமாக எடுத்து கொள்ளலாம். கமெண்ட் பகுதியில் லிங்க் கொடுத்தால், இங்கு வருபவர்களும் படிக்கலாம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஒரு ஐந்து இல்லை ஆறு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.
பூவிழி வாசலிலே.
இதுக்கு முன்னாடி கண்டிப்பா ஏதோ படம் போயிருக்கேன். ஆனா நினைவு இல்லை. அப்பா அம்மா இல்லாம பெரியப்பா பெரியம்மா குடும்பத்தோட அடம் புடிச்சி படத்துக்கு போயாச்சு. படம் ஆரம்பிச்சு அந்த சின்ன பையனோட அம்மா அப்பாவ கொல்ற சீன் வந்ததும், 'அம்மா கிட்ட போகணும்'னு ஓன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணி... ஆரம்பமே அமர்க்களம் தான்!
இப்போ கூட இந்த படம் பார்த்தா கொஞ்சம் பயமா தான் இருக்கும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சத்யம். தலை எழுத்து!
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திமிரு. இருக்கற DVD எல்லாம் பல தடவ பார்த்தாச்சுன்னு நண்பர் புதுசா இதை வாங்கி வந்தார். இன்னும் முழுவதும் பார்க்கவில்லை. இது வரைக்கும் விருவிருப்பாதான் போகிறது. திரும்பவும் அப்பாவி ஒருத்தர் ஏதாவது ரவுடியின் அட்டகாசத்தால் அவதிப்பட்டு அதை எப்படி சமாளிக்கிறார் என்கிற கதை. கொஞ்சம் தான் வித்தியாசம். ஷ்ரேயா-வின் பாத்திரம் கொஞ்சம் புதுசு.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மகாநதி. முதல் பாதி பார்க்க ரொம்பவும் கஷ்டமா இருக்கும். ரெண்டாவது பாதி, முக்கியமா climax பார்க்கும்போது அதெல்லாம் மறந்துடும். படத்தின் கதையில் இருந்து தவறி ஒரு சீன், ஒரு பாடல் இருக்காது. இது போன்ற படங்கள் தமிழில் ரொம்ப குறைவு. ஸ்ட்ராங்கான திரைக்கதை. கமல், பூர்ணம் விஸ்வநாதன் அருமையான நடிப்பு.
அன்பே சிவம், மௌன ராகம், தளபதி, நாயகன் போன்ற படங்கள் மறக்க முடியாதவை.
பார்த்ததும் ரொம்ப கோபம் வந்த படம் பருத்தி வீரன்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி எதுவும் இல்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
எனக்கு தொழில்நுட்பம் பிடித்தாலும், சினிமா பொருத்தவரையில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை. உடனே ஞாபகம் வருவது விருமாண்டி படத்தின் திரைக்கதை யுக்தி. புதுமையான ஒன்று. ரொம்பவும் கஷ்டம் கூட. இது ஏதாவது வேறு மொழி படத்தில் இருந்து பெறப்பட்டதா என்று தெரியாது. ஆனால், இந்த படத்திருக்கு ரொம்பவும் பொருந்தி இருந்தது.
கிட்டத்தட்ட இதே யுக்தியை மணிரத்தினம் 'ஆயுத எழுத்து' படத்தில் உபயோகித்தது அவ்வளவாக எடுபடவில்லை என்பது என் கருத்து.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வளவாக இல்லை. நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் தான்.
7. தமிழ்ச்சினிமா இசை?
மலிவு விலை sale இல் கிடைக்கும் டீ-ஷர்ட் மாதிரி ரொம்ப அருமையான இசை முதல் கேட்கவே முடியாதது வரை எல்லாம் கிடைக்கும். நல்லதாய் பார்த்து எடுப்பது கேட்பவர் சாமர்த்தியம்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கில, ஹிந்தி படங்கள் நிறைய பார்பதுண்டு.
ஆங்கிலத்தில் Aviator, blood diamond, cast away போன்ற படங்கள் ரொம்பவும் பிடித்தவை. சமீபத்தில் dark knight, Taken பார்த்தேன்- இரண்டுமே அருமையான படங்கள். அது தவிர அனிமேஷன் படங்களும் பார்பதுண்டு. Incredibles, Cars, Wall-E எல்லாமே தொழில் நுட்பம் மட்டும் இன்றி மிகவும் கற்பனை வளமுள்ள, ரசிக்கக்கூடிய கதைகளுடன் வருகின்றன.
ஹிந்தியில் ஷாருக் கானின் தீவிர ரசிகன். DDLJ, Kuch Kuch Hota Hai போன்ற படங்கள் பல முறை பார்த்திருக்கிறேன். மற்றபடி பிடித்த படங்கள் Taare Zameen Par, Chak De India, Dil Chahta Hai என்று பல சொல்லி கொண்டே போகலாம்.
என் கூட வசிக்கும் ஹாங் காங்கை சேர்ந்த நண்பன் சொல்லி பார்த்த சீன படம் Infernal Affairs. ஆங்கிலத்தில் Departed என்ற பெயரில் ரீமேக் செய்ய பட்டது. என்னை ரொம்பவே வியக்க வைத்த படம். ஆங்கிலத்தில் இருந்ததை விட மொழி புரியாவிட்டாலும் இந்த படம் அருமையாக இருந்தது.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடித்தொடர்பு எல்லாம் எதுவும் இல்லை. சத்யம் மாதிரி படத்தை எல்லாம் $15 கொடுத்து அரங்கில் சென்று பார்ப்பதே தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் பெரிய உதவி இல்லையா??
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
காதல், இரண்டு சண்டைகள், ஐந்து பாடல்கள் என்ற வட்டத்தை தாண்டி கதைக்கு ஏற்ற படங்கள் எடுத்தால், பல தரமான படங்கள் வரலாம்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் நாடு தாண்டி இருந்து பழகியதாலோ என்னவோ, அவ்வளவா பிரச்சனை இருக்காதுன்னு தான் தோணுது.
தமிழர்கள் கொஞ்சம் பித்து பிடித்த மாதிரி தான் அலைவார்கள் - கொஞ்ச நாளைக்கு. Blessing in disguise என்று சொல்வது போல இது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம்.
ஓராண்டுக்கு மேல் என்றால் வருத்த படுவேன். எப்போதாவது வரும் அருமையான படங்களுக்காக எப்போதும் வரும் மட்டமான படங்களை பொருத்து கொள்ளலாம்!
Written on Tuesday, October 21, 2008 by Prasanna Gopalakrishnan
Cinema Cinema
Filed Under:
cinema,
tag,
tamil
2 Comments
Subscribe to:
Post Comments (RSS)
2 Responses to "Cinema Cinema"
பிரசன்னா,
அருமையாக இருக்கிறது. நன்றி!
/// சத்யம் மாதிரி படத்தை எல்லாம் $15 கொடுத்து அரங்கில் சென்று பார்ப்பதே தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் பெரிய உதவி இல்லையா?? ///
:-))
October 24, 2008 at 12:00 AM
நன்றி RV!
ம்ம்ம்ம்.. என்னோட ஆதங்கம் உங்களுக்கு சிரிப்பா போச்சு!
Post a Comment